search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி விபத்து"

    திருச்சி அருகே விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துறையூர்:

    திருச்சியில் இருந்து துறையூரை நோக்கி பால் பாக் கெட்டுகளை ஏற்றி கொண்டு ஒரு வேன் சென்றது. வேனை மண்ணச்சநல்லூர் அடுத்த அத்தாணி கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி (வயது 30) என்பவர் ஓட்டினார். பெரமங்கலத்தை சேர்ந்த கதிரேசன் (22) என்பவர் கிளீனராக இருந்தார்.

    வேன் திருச்சி-துறையூர் சாலையில் கரட்டாம்பட்டி அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலை யோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் புலிவலம் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் குருமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து புலி வலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    துறையூரை அடுத்த நரசிங்க புரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி வீரம்மாள் (49) செங்கல் ஏற்றி செல்லும் லாரியில் கூலிதொழிலாளி. நேற்று செல்லிபாளையம் என்ற இடத்தில் செங்கல் இறக்க சென்றார்.

    பின்னர் ஒரு இடத்தில் செங்கல் இறக்கப்பட்டது. அப்போது லாரியை சிறிது தூரம் நகர்த்த வேண்டி இருந்தது. லாரியில் டிரைவர் செந்தில் இல்லாததால் ஒட்டம்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனக்கு லாரி ஓட்ட தெரியும் என்று கூறி லாரியை ஓட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி வீரம்மாள் மீது மோதியது. இதில் வீரம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூரை  அருகே  உள்ள காளிப்பட்டியை சேர்ந்தவர் நடேசன் (வயது58) கூலி தொழிலாளி.  இவர் துறையூரில் வேலையை முடித்து கொண்டு சைக்கிளில் பசும்புல்  கட்டிக் கொண்டு துறையூர்-திருச்சி  சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது துறையூரில் இருந்து  திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாரதவிதமாக நடேசன் சென்ற சைக்கிளில் மோதியதாக  கூறப்படுகிறது. இந்த விபத்தில் நடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். சைக்கிள் அருகில் உள்ள தோட்டத்திற்கு தூக்கி வீசப்பட்டது.

    இது குறித்து  தகவல் அறிந்ததும் துறையூர் போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகிறார்கள். 
    திருச்சி அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன

    முசிறி:

    சேலம் புதூர்சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 45). இவர் பார்சல் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் சேலத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார்.

    இன்று காலை திருச்சி மாவட்டம் முசிறி சுடுகாட்டுத் துறை பகுதியில் செல்லும் போது, அந்த வழியாக தொட்டியம் அரங்கூர் கிளிஞ்சாநத்தம் நடுத்தெருவை சேர்ந்த சக்திரசேகர்(32) என்பவர் ஓட்டிச்சென்ற லாரியும், ராஜசேகர் லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    உடனே அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜசேகர் இறந்தார். சந்திர சேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×